×

திருவள்ளூரில் கலைச்சங்க நிர்வாகிகள் தேர்வு

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள கலைச் சங்கத்திற்கு 2024 – 2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளாக டி.ஜெயசீலன், எஸ்.முரளி, ஜி.வி.ராம்மோகன், என்.ஜி.மோகன் ஆகியோர் குழுவாக இருந்து தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்தனர். அதன்படி கலைச்சங்க தலைவராக எல்.எஸ்.பீகம்சந்த், செயலாளராக ஏ.கமலக்கண்ணன், பொருளாளராக டி.எஸ்.இளங்கோவன், விளையாட்டுத்துறை செயலாளராக ஜி.பாஸ்கரன், உள் தணிக்கையாளராக லோகநாதன், நிர்வாக குழு உறுப்பினர்களாக எம்.டில்லி, கே.பி.எம்.எழிலரசன், எஸ்.கோல்டு கோபால், எஸ்.பாஸ்கர், எஸ்.நவநீத கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

The post திருவள்ளூரில் கலைச்சங்க நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur Arts Council ,Thiruvallur ,Tiruvallur ,D. Jayaseelan ,S. Murali ,G. V. Rammohan ,N. G. Mohan ,
× RELATED திருவள்ளூர் மற்றும் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!!