×

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத எம்.பி. பிரஜ்வல் பற்றி அமித்ஷாவுக்கு பாஜக நிர்வாகி எழுதிய கடிதம் வெளியானது

டெல்லி: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத எம்.பி. பிரஜ்வல் பற்றி அமித்ஷாவுக்கு பாஜக நிர்வாகி எழுதிய கடிதம் வெளியானது. பிரஜ்வல் பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்திருப்பதாக அமித்ஷாவுக்கு 2023-ல் எழுதிய கடிதம் வெளியானது. பிரஜ்வல் பற்றி அமித்ஷாவுக்கு தேவராஜே கவுடா எழுதிய கடிதத்தை கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே வெளியிட்டார். பெண்களை ஆபாசமாக எடுத்த வீடியோக்கள் தனக்கு வந்துள்ளதாக அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்கள் குறித்து 2023-ம் ஆண்டிலேயே பாஜக தலைமைக்கு தெரிந்திருப்பது அம்பலமானது. பிரஜ்வல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிந்திருந்தும் மீண்டும் அவர் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் குறித்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்து அமித்ஷா நேற்று பேசியிருந்த நிலையில் கடிதம் வெளியாகி உள்ளது.

The post பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத எம்.பி. பிரஜ்வல் பற்றி அமித்ஷாவுக்கு பாஜக நிர்வாகி எழுதிய கடிதம் வெளியானது appeared first on Dinakaran.

Tags : Majatha M. ,BJP ,Amitshah ,Prajwal ,Delhi ,Amitsha ,Devaraje Gowda ,Majatha M. B. ,
× RELATED பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது...