விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் பூங்காவில் பழங்கால கல் மரங்கள் பாதுகாக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. காலத்தின் சுழற்சியால் கல்லாகி போன ஃபாஸில் உட்ஸ் எனப்படும் பண்டைய கால கல் மரங்கள், விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள திருவக்கரை, நெய்வேலி, அரியலூர் பகுதிகளில் ஏராளமாக கிடைக்கின்றன. இந்த அறியகால பொக்கிஷங்கள் சேகரிக்கப்பட்டு விழுப்புரம் – புதுச்சேரி எல்லையில் உள்ள திருவக்கரை புவியியல் பூங்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 247 ஏக்கர் பரப்பளவிலான இந்த பூங்காவில் 200க்கும் அதிகமான கல் மரங்கள் உள்ளன. பழங்காலத்தில் மரங்களாக இருந்து பின்னர் காலப்போக்கில் கல்லாகவே மாறிவிட்ட மரங்களை இந்திய புவியியல் ஆய்வு துறை பாதுகாத்து வருகிறது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மரங்களை கண்டு ரசிப்பதற்காக திருவக்கரை தேசிய கல் மர பூங்காவுக்கு வரும் மக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
The post விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கும் பழங்கால கல் மரங்கள்; திருவக்கரை தொல்பொருள் பூங்காவில் காட்சிக்கு வைப்பு..மக்கள் வியப்பு..!! appeared first on Dinakaran.