×
Saravana Stores

கடும் வெயிலுக்கு இடையே குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கொட்டிய கோடை மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி..!!

குமரி: தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்துள்ளது. மற்ற மாவட்டங்களை போன்று கன்னியாகுமரியிலும் கடந்த ஒரு வாரமாக வழக்கத்திற்கு மாறாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது என்றாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மலையோர கிராமங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. அதேபோன்று இன்று பிற்பகலில் நாகர்கோவில், வடச்சேரி, ராமன்புதூர், செட்டிகுளம், கோட்டார், ஈத்தாமொழி, புன்னைநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கொட்டிய கோடை மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

இதேபோன்று தோவாளை, வண்டாபுரம், சீரப்பால், செண்பகராமன் புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் சுமார் 1 மணி நேரம் கோடை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக தக்கலையில் 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோழிபோர்விலையில் 32.5 மில்லி மீட்டரும், சிறுலகோடு பகுதியில் 28.4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

The post கடும் வெயிலுக்கு இடையே குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கொட்டிய கோடை மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Kumari ,Tamil Nadu ,Kanyakumari district ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகையையொட்டி மலர்கள்...