உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரம் மாவட்டத்தில் ஹத்வா என்ற கிராமத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை இளைஞர்கள் கட்டையால் அடித்து விரட்டியடித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகர மாவட்டத்தில் ஹத்வாவில் உள்ள கிராமத்தில் சிறுத்தை ஒன்று காலையில் புகுந்தது. அங்கு உதயராஜ் என்ற 80 வயது மிக்கவர் வீட்டின் வாசலில் அமர்ந்துள்ளார். திடீரென சிறுத்தை அவரை தாக்க முயன்றது.
சிறுத்தை அவரை தாக்க துவங்கியதும் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினம் ஓடிவந்தனர். இதில் சோனு, ஷெரிப், பவிகீர்த், அமீர் ஆகியவர்களையும் சிறுத்தை தாக்கி அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுத்தை தொடர்ந்து அப்பகுதியில் நடமாடும் காரணமாக அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் கட்டைகளை எடுத்து சிறுத்தையை தாக்குவதற்காக தயார் நிலையில் இருந்தனர்.
திடீரென ஒரு வீட்டிலிருந்து சிறுத்தை பாய்ந்து ஓடிவரும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சிறுத்தை அவரை தாக்குவதும் இளைஞர்கள் 10 பேர் கட்டைகளை வைத்து சிறுத்தையை தாக்குவதும் வீடியோ வெளியாகியுள்ளது. பிறகு காயம்பட்ட சிறுத்தை அங்கிருந்து தப்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த சிறுத்தை கிராமத்திற்குள் சுற்றி திரிவதாகவும், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரம் சிறுத்தை பிடிபடவில்லை. சிறுத்தை ஊருக்குள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் அதே போல் சிறுத்தையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உத்தரப்பிரதேசத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையை கட்டையால் விரட்டியடித்த இளைஞர்களின் பரபரப்பு காட்சி..!! appeared first on Dinakaran.