×

தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு; வரத்து குறைவால் ஏலக்காய் விலை எகிறியது.! மகிழ்ச்சியில் வியாபாரிகள்

போடி: தமிழக கேரள எல்லையில் ஏலக்காய் சீசன் நிறைவு பெற்றதால் வரத்து குறைந்திருக்கும் நிலையில் ஏலக்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக-கேரள எல்லை பகுதியில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் அளவில் ஏலக்காய் விவசாயம் நடந்து வருகிறது. தென்மாவட்ட தமிழர்கள் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்களாக கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அதிகளவில் ஏலத்தோட்டத்தில் தங்கி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குளிர், வெயில் பருவ நிலைகளை எதிர் கொண்டு அனைத்து நிலைகளையும் சமாளித்து வருடத்தில் 8 முதல் 10 மாதம் வரையில் ஏலக்காய் உற்பத்தி செய்து 6 எடுப்புகளாக அறுவடை செய்கின்றனர். இந்த ஏலக்காய்களை இந்திய நறு மணவாரியம் அதாவது ஸ்பைஸஸ் போர்டு மூலமாக இயங்கும் கேரள மாநிலம் புத்தடியிலும், தமிழ்நாடு தேனி மாவட்டம் போடியில் உள்ள ஸ்பைசஸ் போர்டில் இயங்கும் இ-சேவை ஏல மையத்திற்கு ஒவ்வொரு தரத்திலும் தனித்தனி சாம்பிலாக மாதிரிகள் கொண்டு வரப்பட்டு பார்வைக்கு வைக்கப்படுகிறது.

அங்கு தமிழக கேரளா வியாபாரிகள் ஏலம் கேட்டு விலையினை நிர்ணயம் செய்கின்றனர். அதுவே உலக அரங்கு வரை ஒலிக்கிறது. விவசாயிகள் பல்க் ஏலக்காய்களை ஏற்கனவே உறுப்பினராக உள்ள ஸ்பைஸஸ் போர்டு நறுமண வாரியத்தில் விற்பனைக்கு ஒப்படைக்கின்றனர். அதில் தரம் பிரித்து எக்ஸ் போர்ட்ஸ் குவாலிட்டி என சொல்லப்படும் எட்டு பருவட்டு ஏலக்காய் டன் கணக்கில் தமிழக கேரளா வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிக மருத்துவ குணம் நிறைந்ததால் இந்திய ஏலக்காய்க்கு வெளிநாடுகளில் அதுவும் குளிர்ச்சியான நாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. கடந்தாண்டுகளில் பல்க் ஏலக்காய் கிலோ ரூ.800க்கு விற்க துவங்கி மெல்ல மெல்ல விலை உயர்ந்து ரூ.1300 வரைக்கும் விலை அதிகரித்து விவசாயிகள் வியாபாரிகளுக்கு சற்று கைகொடுத்தது. இதற்கிடையில் சர்வதேச மார்க் கெட்டில் இந்திய ஏலக்காய் மணம், தரம், தன்மை போன்றவற்றால் பிற நாட்டு ஏலக்காய்களை பின்னுக்கு தள்ளியே வருகிறது.

கடந்தாண்டு ஆடி 18ம் தேதி இந்திய ஏலக்காய் இடுக்கி மாவட்டத்தில் சீ ஸன் துவங்கியதில் பாதிப்பு இல்லா சீரான உற்பத்தியாக இருந்தது. 45 நாட்களுக்கு ஒருமுறை ஏலச்செடிகளில் ஏலம் பறிக்கப்படும். அடுத்தடுத்து தொடர்ந்து 10 மாதத்தில் 6 பறிப்புகள் எடுத்து ஏலக்காய் சீஸன் கடந்த மார்ச் மாதம் நிறைவு பெற்றது. இதற்கிடையில் நடப்பு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏலக்காய் வரத்து குறைவின் காரணமாக அடுத்தடுத்து நாளுக்கு நாள் ஏலக்காய் தேவை அதிகரித்து இருப்பதால் விலை அதிகரித்து வருகிறது. இந்த இடைப்பட்ட ஏப்ரல், மே இரண்டு மாதங்களில் விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் 15 ஆண்டுகளைக் கடந்த ஏலச்செடிகளை பறித்து புதிய செடிகளை நட்டு வைப்பதும், மரங்களுக்கு கின்னி போட்டு கிளைகள் செடிகள் வெட்டி அகற்றுவதும், ஏலச்செடிகளுக்கு பலம் கி டைக்கவும் கருகி விடாமலும் மழை நீர் மற்றும் பாசன நீர் தடை இன்றி சரியாக சென்று தேங்கி வடிவதற் கான கவாத்து பணிகளையும் விவ சாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

ஏற்கனவே வெயிலில் தாக்கம் கடுமையாக இருப்பதால் வழக்கத்திற்கு மாறாக வீசும் வெப்பக் காற்றால் ஏலச்செடிகள் கருகி வருவது தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது. மேலும் பல்க் என்று சொல்லப்படும் மொத்த ஏலக்காயின் விலை ரூ.2300 நெருங்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் ஏ ஜோன் என்ற முதல் தரமான 8 பரு வட்டு கிலோ ரூ.3000 என உயர்ந்து உச்சத்தை தாண்டியுள்ளது வரலாற்றை உடைப்பதாகும் . ஏற்கனவே வியாபாரிகள் விவசாயி களிடம் ஸ்பைசஸ் போர்டு மூலமாக ஏலக்காய்களை வாங்கி இருப்பு வைத்து இருந்தவர்களுக்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது. விலை அதிகரிப்பதால் அந்த ஏலக்காய்க ளை தற்போது விற்பனைக்கு கை கொடுத்திருப்பதால் அதிக லாபம் ஈட்டி வருவதால் வியாபாரிகள் மகி ழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு; வரத்து குறைவால் ஏலக்காய் விலை எகிறியது.! மகிழ்ச்சியில் வியாபாரிகள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu-Kerala border ,Bodi ,Tamil Nadu ,Kerala border ,Western Ghats ,
× RELATED தமிழக-கேரள எல்லைப் பகுதியில் சீசன்...