×

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 57% நீர் இருப்பு.. தடையின்றி குடிநீர் விநியோகம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்..!!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 57% அளவுக்கு நீர் இருப்பு உள்ளதால் கோடை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 6,702 மில்லியன் கனஅடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 57% ஆகும்.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது 5 ஏரிகளில் மொத்தமாக 7 டி.எம்.சி. குடிநீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தவிர நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமும் தினமும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்பில்லை என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

The post சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 57% நீர் இருப்பு.. தடையின்றி குடிநீர் விநியோகம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,CHENNAI DRINKING WATER BOARD ,Chennai Managar ,Cemerbambakkam ,Bundi ,Chozhavaram ,Puhal ,Kannakota ,
× RELATED பிரதான உந்து குழாயில் இணைப்பு பணி 5...