- சித்து
- ஈரோடு மாவட்டம்
- ஈரோடு
- சித்து, ஈரோடு மாவட்டம்
- மக்களவை
- சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி
- சித்தோடு, ஈரோடு மாவட்டம்
- தின மலர்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி டிஸ்பிளே கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. நடந்து முடிந்த ஈரோடு மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு அருகே உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 6 ஸ்ட்ராங் ரூம்கள் அமைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் 221 சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் ஒரு சிசிடிவி கேமரா பழுதான நிலையில், இன்று காலை சித்தோடு அரசு கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பழுது ஏற்பட்டது.
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் உள்ள பகுதியில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் இருந்த தொலைக்காட்சி திடீரென்று பழுது ஏற்பட்டது. சிசிடிவி கேமரா காட்சிகள் சுமார் 10 நிமிடங்களுக்கு டிஸ்பிளேயில் தெரியவில்லை என கூறப்படுகிறது. இதனை அறிந்த அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் சிசிடிவி காட்சியின் டிஸ்பிளே கோளாறை சில நிமிடங்களில் சரி செய்தனர். கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
The post ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி டிஸ்பிளே கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.