×

வாடகை கட்டிடத்தில் இயங்கும் போஸ்ட் ஆபீஸ்

 

தொண்டி,ஏப்.30: தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள போஸ்ட் ஆபிஸ் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இடத்தின் உரிமையாளர்கள் அவ்வப்போது மாற்றச் சொல்வதால் அடிக்கடி போஸ்ட் ஆபிஸை இடம் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டினால் நிரந்தரமாக ஒரே இடத்தில் செயல்படும். அதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நம்புதாளை பொதுமக்கள் கூறியது, நம்புதாளை தபால் தந்தி அலுவலகம் முகிழ்த்தகம், காரங்காடு, முள்ளிமுனை, புதுப்பட்டினம் உள்ளிட்ட பல கிளை அலுவலகத்திற்கு தலைமை அலுவலகமாக உள்ளது. ஆனால் இதற்கு நிரந்தர சொந்த கட்டிடம் இல்லாமல் பல வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அடிக்கடி இடம் மாற்றமும் செய்யப்படுகிறது. அதனால் நிரந்தரமாக ஒரே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post வாடகை கட்டிடத்தில் இயங்கும் போஸ்ட் ஆபீஸ் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Nambuthalai ,Dinakaran ,
× RELATED கல்வி வளர்ச்சி நாள் விழா