×
Saravana Stores

பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி

 

சிவகங்கை,ஏப்.30: சிவகங்கை அருகே குமாரபட்டியில் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை,  மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி தலைமை வகித்தார்.

பின்னர் வேளாண்மை துணை இயக்குநர்(ஓய்வு) மணிவண்ணன் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை மற்றும் உர மேலாண்மை சம்பந்தமான கருத்துக்களையும், நெல்லை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி அதிக லாபம் பெறுவது எப்படி என்பது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

இதனை தொடர்ந்து தொழில்நுட்ப உதவி மேலாளர் ராஜா நெல் வயலில் பறவை பந்தல் அமைத்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் உயிர் பூஞ்சாண கொல்லி, உயிர் பாக்டீரியா பாக்கெட்டுகள் தலா நான்கு வீதம் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.

The post பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Department of Agriculture ,Kumarapatti ,Dinakaran ,
× RELATED வழப்பறி வழக்கில் மூவருக்கு 5 ஆண்டு சிறை