- செம்மங்குடி ஊராட்சி
- சீர்காழி
- செம்மங்குடி
- பஞ்சாயத்து
- சிர்காஜி யூனியன்
- மயிலாதுதுரை மாவட்டம்
- மயிலாடுதுறை
- கொள்ளிடம்
- Sembanarkovil
சீர்காழி, ஏப்.30:செம்மங்குடி ஊராட்சிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சீர்காழி ஒன்றியம் செம்மங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு த.கு.வ.வாரிய பராமரிப்பில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களை சார்ந்த 295 தரம் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் 315 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் குடிநீர் சரிவர வரவில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேற்கண்ட குடிநீர் திட்டத்தில் பிரதான நீரேற்று குழாய் (450 விட்டமுள்ள (DI K7) சீப்புலியூர் அருகில் தெற்கு ராஜன் வாய்க்காலில் ஊரக வளர்ச்சிதுறையின் மூலம் பாலம் கட்டும் பணியின் போது 23.04.2024 அன்று சரிந்து விட்டது.
உடனே குழாய் சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் 26.04.2024 அன்று முடிக்கப்பட்டுவிட்டது. மேலும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நீரேற்று குழாயின் வளைவு பகுதியில் கான்கிரிட் பிளாக் (Thrust Block) அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் இரவு 8.00 மணி முதல் குடிநீர் ஏற்றப்பட்டு, 295 தரம் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் 315 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் செம்மங்குடி ஊராட்சிக்கும் சேர்த்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து அதிகாரிக்கு நன்றி தெரிவித்தனர்.
The post செம்மங்குடி ஊராட்சிக்கு சீரான குடிநீர் appeared first on Dinakaran.