தென்காசி,ஏப்.30: தென்காசி அடுத்த பிரானூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனு விவரம்: தென்காசி யூனியன், பிரானூர் ஊராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி மன்றத்தால் சுமார் 700 குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை வணிக ரீதியாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் குடிநீர் இணைப்புகளிலும் அனுமதிக்கப்பட்ட குடிநீர் குழாயின் அளவை விட கூடுதல் அளவிலான குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஏனைய குடிநீர் இணைப்புகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சில இணைப்புதாரர்களிடம் பஞ்சாயத்து துணைத் தலைவர் மாதம், மாதம் பெருந்தொகையை சட்ட விரோதமாக வசூலித்து வருவதாக தெரிகிறது. மேலும் பொதுமக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்பட வேண்டிய குடிதண்ணீரை பஞ்சாயத்து துணைத்தலைவர் செய்து வரும் கட்டிட ஒப்பந்த வேலைக்கு தவறாக பயன்படுத்துகிறார். துணைத் தலைவரின் இது போன்ற அதிகார துஷ்பிரயோக செயல்களால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கான குடிநீர் போதிய அளவு கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதுவிஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post பிரானூர் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை appeared first on Dinakaran.