×
Saravana Stores

புற்றுநோய் நோயாளிகள் அலைக்கழிப்பு ஜிப்மர் அதிகாரியிடம் முறையீடு

புதுச்சேரி, ஏப். 30: புதுச்சேரி கோரிமேட்டில் செயல்படும் ஜிப்மர் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் முக்கிய மையமாக விளங்கி வருகிறது. புற்றுநோய் ஆராய்ச்சி மையமும் அங்கே ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கடலூர், அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த புற்று நோயாளிகள் பெருமளவில் ஜிப்மரில்தான் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக சில மாதங்களாக ஜிப்மரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ரேடியேஷன் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற புகார்கள் வந்ததன் அடிப்படையில் இதுதொடர்பாக டாக்டர் துரைராஜனை நேற்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் நேரில் சந்தித்து முறையிட்டார். அப்போது, அங்கு கதிரியக்க சிகிச்சை அளிப்பதற்காக சுமார் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மேலும் ஒரு புதிய கருவியை வாங்குவதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அதற்கான டெண்டர் கோரப்பட்டு இருக்கிறது. அந்த கருவி முழுமையான பயன்பாட்டுக்கு வர சுமார் ஒரு வருடம் வரை ஆகலாம். அப்போது மேலும் 100 பேருக்கு கூடுதலாக ரேடியேஷன் சிகிச்சை அளிக்க முடியும்” என்று டாக்டர் துரைராஜன் தெரிவித்தார். இவ் விவரங்களை முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனிடம் தொலைபேசியில் தெரிவித்த எம்பி, அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவை மேம்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

The post புற்றுநோய் நோயாளிகள் அலைக்கழிப்பு ஜிப்மர் அதிகாரியிடம் முறையீடு appeared first on Dinakaran.

Tags : JIPMER ,Puducherry ,Jipmar Hospital ,Puducherry Korimate ,Cuddalore, Ariyalur ,Villupuram ,Jibmar ,
× RELATED புதுச்சேரியில் ஜிப்மரை தொடர்ந்து 2வது...