×

குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது

சேலம், ஏப். 30: சேலத்தில் குட்கா, புகையிலை பொருட்களை விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அனைத்து பகுதியிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைதாகும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், சேலம் ஜாகீர் அம்மாப்பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா,புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார்அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மளிகை கடை உரிமையாளர் அப்துல் ரசாக்ைக பிடித்து விசாரித்தனர். அதில், செவ்வாய்பேட்டையை சேர்ந்த விசால், அப்துல் ரசாக்கிற்கு தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை சப்ளை செய்தது தெரிந்தது. இதையடுத்து கடையில் இருந்து ₹76 ஆயிரம் மதிப்புள்ள 64கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ரசாக்கை கைது செய்தனர். குட்கா சப்ளை செய்த விசாலை தேடி வருகின்றனர்.

The post குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Salem ,Dinakaran ,
× RELATED பள்ளி அருகே குட்கா விற்ற வியாபாரி கைது