×

உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு

வெலிங்டன்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டி20 உலக கோப்பை தொடரை இம்முறை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்த உள்ளன. ஜூன் 1 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ள இத்தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அதிரடி வீரர் டெவன் கான்வே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதால், வேகப் பந்துவீச்சாளர் ஆடம் மில்னே இடம் பெறவில்லை. மொத்தம் 15 வீரர்கள் அடங்கிய அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மேட் ஹென்றி, ரச்சின் ரவிந்திரா இருவரும் முதல் முறையாக டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளனர். மற்ற வீரர்கள் அனைவருமே உலக கோப்பை அனுபவம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவன் கான்வே, கிளென் பிலிப்ஸ், ஃபின் ஆலன், லோக்கி பெர்குசன், ரச்சின் ரவிந்த்ரா, டிரென்ட் போல்ட், மேட் ஹென்றி, மிட்செல் சான்ட்னர், மைகேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், ஈஷ் சோதி, மார்க் சாப்மேன், ஜிம்மி நீஷம், டிம் சவுத்தீ.

The post உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : World Cup T20 ,Wellington ,New Zealand ,ICC World Cup T20 ,T20 World Cup ,USA ,West Indies ,News ,Dinakaran ,
× RELATED ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி...