- புரோ-கலிஸ்தான்
- கனடிய
- பிரதம
- அமைச்சர்
- இந்தியா
- புது தில்லி
- கனடா
- காலிஸ்தான்
- டொராண்டோ
- கனடிய பிரதமர்
- ஜஸ்டின் ட்ருதியே
புதுடெல்லி: காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே உறவு சரியில்லை. இந்தநிலையில் டொராண்டோவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் இந்த கோஷங்களை எழுப்பியதாக தெரிகிறது. இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான கனடா தூதரரை வரவழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கனடாவில் பிரிவினைவாதம், தீவிரவாதம், வன்முறைக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசியல் இடத்தை இது மீண்டும் ஒருமுறை விளக்குகிறது. இந்த நடவடிக்கைகள் இந்தியா-கனடா உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
The post கனடா பிரதமர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: இந்தியா கண்டிப்பு appeared first on Dinakaran.