பாங்காக்: தாய்லாந்து நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு முழுமை அடையாத நிலையில் முதல் முறையாக அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது வெளியுறவு அமைச்சரான அப்ருப்ட்லி துணை பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு வெளியுறவு துறை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அப்ருப்ட்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதமர் ஸ்ரேத்தா தெரிவித்துள்ளார்.
The post தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் ராஜினாமா appeared first on Dinakaran.