- அண்ணாமலை
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- ஜனாதிபதி
- YouTube
- கிரிஸ்துவர்
- உச்ச நீதிமன்றம்
- 2022 தீபாவளி திருவிழா
- அண்ணாமலை உச்சநீதிமன்றம்
- தின மலர்
புதுடெல்லி: கடந்த 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ அமைப்புதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கில் அண்ணாமலை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு நேற்று வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் மனுதாரர் பியூஷ் மனுஷ் ஆறு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். அதற்கு அண்ணாமலை தரப்பில் அடுத்த ஆறு வாரத்திற்குள் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை தள்ளிவைப்பு: எதிர்மனுதாரர் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.