காஞ்சிபுரம்: குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்த ஓவிய பயிற்சி முகாம் நடைபெற்றது. உத்தரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் சுமார் 200 குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். இந்தக் கோடை காலத்தில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள 50க்கும் மேற்பட்ட சிறுவர்களை இல்ல நிர்வாகி சினு, ஓவிய ஆசிரியர் விக்ரம், மேலாளர் சரோஜினி தேவி ஆகியோர் புகழ்பெற்ற கைலாசநாதர் திருக்கோயிலுக்கு அழைத்து வந்தனர். இங்குள்ள சிற்பங்களை மாணவர்கள் பார்வையிட்ட பின் அவர்களுக்கு பிடித்த சிற்பங்களை ஓவியங்களாக நேரலையில் வரைய பயிற்சி கொடுத்தனர். இந்த ஓவிய பயிற்சியை மாணவர்கள் எளிமையாக மேற்கொண்டது திருக்கோயிலுக்கு வந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
The post காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி முகாம் appeared first on Dinakaran.