×
Saravana Stores

மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி(53), மேட்டூர் அனல்மின் நிலையத்தில், தொழிலாளர் நல அலுவலராக பணி புரிந்து வந்தார். இவர்களது மகன் புகழ்ஒளி(22), பொறியியல் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, உறவினரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க தமிழரசி, புகழ் ஒளி ஆகியோர் காரில் அழைத்துச் சென்றனர். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினரை அனுமதித்த பிறகு, சேலத்திலிருந்து மேட்டூருக்கு புறப்பட்டனர்.

காரை புகழ்ஒளி ஓட்டி வந்தார். மேச்சேரி அருகே பொட்டனேரி நான்கு ரோட்டில், நேற்று அதிகாலை வந்தபோது, நிலை தடுமாறி தறிகெட்டு ஓடிய கார், அருகில் இருந்த புளியமரத்தின் மீது பலமாக மோதியது. இதில், காரில் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி தாய்- மகன் இருவரும் படுகாயமடைந்தனர். அப்போது அங்கு வந்தவர்கள் இருவரையும் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தமிழரசி உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக தமிழ்ஒளி சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரசு ஒப்பந்ததாரர், மனைவி சாவு
நெல்லை டிவிஎஸ் நகரைச் சேர்ந்த மாதவ ராஜா மகன் வெங்கடேஷ் (54). அரசு ஒப்பந்ததாரர். இவரது மனைவி சுமிதா (47). இரண்டு பேரும் ராஜபாளையத்தில் கணவருடன் வசித்து வரும் தனது மகளை பார்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் நெல்லைக்கு தங்களது காரில் திரும்பி கொண்டிருந்தனர். காரை வெங்கடேஷ் ஓட்டி வந்தார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள நெடுங்குளம் விலக்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து காலாங்கரை ஓடையில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் வெங்கடேஷ், சுமிதா மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது தம்பதி இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

The post மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி appeared first on Dinakaran.

Tags : Mettur ,Jayakumar ,Mettur power ,Salem district ,Mettur Thermal Power Station ,Tamilarasi ,Mettur Analytical Power Station ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு