×

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்க, தயாள் பத்மநாபன் எழுதி இயக்கி தயாரித்துள்ள கிரைம் திரில்லர் படம், ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’. திரைக்கு வந்த ‘கொன்றால் பாவம்’ படத்தை தொடர்ந்து மீண்டும் தயாள் பத்மநாபன், வரலட்சுமி இணைந்துள்ளனர். படம் குறித்து தயாள் பத்மநாபன் கூறுகையில், ‘நான் ஹனுமனின் தீவிர பக்தர் என்பதால், அவரது இருப்பை உள்ளடக்கிய சில தலைப்புகளை எனது படங்களுக்கு வைக்கிறேன். இப்படம் பல சாதக, பாதகங்களைக் கொண்ட போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. உண்மையான ஸ்டேஷன் பெயர் மற்றும் பகுதிகளை படமாக்கவில்லை.

‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்று கற்பனை பெயர் சூட்டியுள்ளோம். போலீஸ் கேரக்டர்களில் வரலட்சுமி, ஆரவ் நடித்துள்ளனர். நான்-லீனியர் பாணியில் உருவாகியுள்ள இதில் சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்பிரமணியம் சிவா நடித்துள்ளனர். சேகர் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, மணிகாந்த் கத்ரி இசை அமைத்துள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணி நடந்து வருகிறது’ என்றார்.

Tags : Dayal Padmanaban ,Varalakshmi ,Dayai ,
× RELATED என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு சம்மன்...