தொண்டாமுத்தூர்: வெள்ளிங்கிரி மலை ஏறிய பூசாரி மூச்சு திணறி பலியாகி உள்ளார். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளிங்கிரி கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 27ம் தேதி வரை மலை ஏறிய பக்தர்களில் 8 பேர் பலியானதால் மலை ஏறும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் ஒரு பக்தர் பலியாகியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா வேலூர் கிராமம் டாக்டர் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் புண்ணியகோடி (46). சிவப்பக்தரான புண்ணியகோடி சிவன் கோயிலை சொந்தமாக கட்டி பூசாரியாகவும் இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏற 10 நண்பர்களுடன் வந்தார். பின்னர் அவர்கள் மலை ஏற தொடங்கினர். 1வது மலை ஏறியபோது புண்ணியகோடிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சோதித்ததில் வரும் வழியிலேயே புண்ணியகோடி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post வெள்ளிங்கிரி மலை ஏறிய பூசாரி மூச்சு திணறி சாவு: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு appeared first on Dinakaran.