×
Saravana Stores

தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய வழக்கு: பாஜ மாவட்ட தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு


சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரின் உதவியாளர் விருதகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி 21ம் ஒரு புகார் கொடுத்தார். அதில், தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச விடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டினர். அதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ தலைவர் அகோரம் உள்ளிட்டோர் உடைந்தையாக உள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அகோரம் ஏற்கனவே ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி டிவி.தமிழ்செல்வி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். 45 நாட்கள் மேலாக சிறையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். ஆனால் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அகோரத்தின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய வழக்கு: பாஜ மாவட்ட தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bail ,BJP district ,Chennai High Court ,CHENNAI ,Srilasree Masilamani ,Desika Gnanasampanda Paramacharya ,Mayiladuthurai Darumapuram Adinam ,Vridhakiri ,Mayiladuthurai ,Superintendent of Police ,Darumapuram ,Adinath ,Baja District ,President ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் காவல்துறையினரிடம் ரகளை செய்தவர் ஜாமின் கோரி மனு!!