×
Saravana Stores

அமித் ஷா தொடர்பான போலி வீடியோ: தெலங்கானா முதலமைச்சருக்கு டெல்லி போலீஸ் சம்மன்!

டெல்லி: தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மே 1-ம் தேதி ஆஜராகுமாறு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பான போலி வீடியோ வெளியான விவகாரத்தில் டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 7-ம் தேதி 3-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வரும் நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.

மேலும் அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பா.ஜனதா 400 இடங்கள் வெற்றி பெற்றால் இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஓதுக்கீடு விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ மாற்றப்பட்டுள்ளது. காங்கிரசார் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து, அமித்ஷாவின் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக கூறி தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மே 1-ம் தேதி ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்து மின்னணு உபகரணங்களையும் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

The post அமித் ஷா தொடர்பான போலி வீடியோ: தெலங்கானா முதலமைச்சருக்கு டெல்லி போலீஸ் சம்மன்! appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Delhi Police ,Telangana ,Chief Minister ,Delhi ,Revanth Reddy ,Union Home Minister ,Parliamentary Election ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவின் வெளிநாட்டு பயணம் குறித்த...