×
Saravana Stores

கண்டாச்சிபுரம் அருகே திரவுபதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலம்: 7டன் எடை கொண்ட அம்மன் தேர், முக்கிய வீதிகள் வழியாக பவனி!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்த வீரபாண்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வீரபாண்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 14ம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு தேர்த்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் திரவுபதி அம்மன் பவனி வர தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வகையில் 7 டன் எடை கொண்ட தேரை 450 இளைஞர்கள் தோளில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தன. மின்னொளியில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த இந்த தேர்திருவிழா கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேர் திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை வழிபட்டு சென்றனர். நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்த தேரை இன்று மாலை தீமிதிக்கும் இடத்திற்கு பக்தர்கள் கொண்டு செல்வார்கள். அதன் பின்னர் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்திய பிறகு தேர் மீண்டும் இழுத்து வரப்பட்டு சன்னதியில் நிறுத்தி வைக்கப்படும்.

 

The post கண்டாச்சிபுரம் அருகே திரவுபதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலம்: 7டன் எடை கொண்ட அம்மன் தேர், முக்கிய வீதிகள் வழியாக பவனி!! appeared first on Dinakaran.

Tags : Tirupati Amman temple festival ,Kandachipuram ,Villupuram ,Villupuram district ,Chariot Festival of Tirupati Amman ,Veerapandi village ,Chariot Festival ,Chitrai ,Tirupati ,Amman ,Veerabandi ,
× RELATED கண்டாச்சிபுரம் அருகே நள்ளிரவில்...