- சென்னை கடற்கரை
- தெற்கு
- ரயில்வே
- சென்னை
- தெற்கு ரயில்வே
- சென்னைக் கடற்கரை
- வேலூர்
- திருவண்ணாமலை
- ஃபாஸ்ட்
- வேலூர் கண்டோன்மென்ட்
சென்னை: சென்னை கடற்கரை – வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி பாஸ்ட் லோக்கல் மின்சார ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.
வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து இந்த ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மே 2-ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரயில் நிலையத்துக்கு 9.35 மணிக்கு சென்றடையும்.
பின்னர் அங்கிருந்து பென்னத்தூர், கன்னமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆர்னி ரோடு, மடிமங்கலம், போலூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12 மணி 5 நிமிடங்களுக்கு செல்லும். திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேடராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வந்து சேரும். அதனைத்தொடர்ந்து வேலூர் ரயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரயில் நிலையங்கள் வழியாக 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை சென்றடையும் என்று ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை கடற்கரை – வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே! appeared first on Dinakaran.