×
Saravana Stores

8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்: ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனர். இதனால் திருப்பதியில் எப்போதும் திருவிழாபோல் காட்சியளிக்கும். பண்டிகை நாட்கள், வாரவிடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் மேலும் அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். அப்போது தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று 86,241 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,730 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று மாலை எண்ணப்பட்டது. இதில் ₹3.65 கோடி காணிக்கையாக கிடைத்தது.

இந்நிலையில் திங்கட்கிழமையான இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 5 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்: ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirupathi Eumalayan Temple ,Swami ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில்...