காஷ்மீர்: காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிச்சரிவு காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (பிஆர்ஓ) ப்ராஜெக்ட் பீக்கன் பனிச்சரிவுஏற்ப்பட்ட இடத்தில் பனியை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ப்ராஜெக்ட் பீக்கன் என்பது 1960 களில் தொடங்கப்பட்ட பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன்-இன் மிகப் பழமையான முயற்சியாகும்.
காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் ஜோஜிலா பாஸ் உட்பட, முக்கிய காஷ்மீர் பகுதிகளில் முக்கிய சாலை உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பனி நடைபெற்று வருகிறது. மேலும் ஜோஜிலா கணவாயில் போக்குவரத்தை நகர்த்துவது, அமர்நாத் யாத்திரை தடங்களை மீட்டமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் சாலைகளில் பனியை அகற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
வனப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பனிச்சரிவு காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா-குரேஸ் சாலையில் உள்ள ரஸ்தான் டாப் என்ற இடத்தில் பனியில் சிக்கிய 35 வாகனங்களை எல்லை சாலைகள் அமைப்பின் குழுவினர் மீட்டனர்.
பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் உள்ளிட்ட சாதகமற்ற வானிலை காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ரம்பன் நகரத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெர்னோட் கிராமம், தொடர்ச்சியான நிலச்சரிவுகளால் சாலைகள், வீடுகள் மற்றும் மின் கோபுரங்களுக்கு பலத்த சேதத்தை சந்தித்தது.
The post காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனிச்சரிவு! appeared first on Dinakaran.