×

செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி பயணம் தொடரட்டும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி பயணம் தொடரட்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் தம்பி குகேஷின் வெற்றி பயணம் தொடரட்டும். மிக இளம் வயதிலேயே FIDE World Chess Championship-ல் பங்கேற்கவுள்ள அவர், சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடி தர வாழ்த்துகள். அவருக்கு என்றும் துணை நிற்போம். வாகை சூடு. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி பயணம் தொடரட்டும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Gukesh ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Tamil Nadu ,Sports ,
× RELATED கல்வியை கனவில் கூட நினைக்காத ஒரு...