×
Saravana Stores

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி: ஆம் ஆத்மி கட்சி தகவல்

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரை அவரது மனைவி சுனிதா அவ்வப்போது சந்தித்து வருகிறார். அது மட்டுமல்லாது அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு அளித்த அனுமதியை திகார் சிறை நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதனையடுத்து விளக்கம் அளித்துள்ள சிறை நிர்வாகம், சிறையின் விதிப்படி கைதிகள் வாரத்திற்கு இரு முறை மட்டுமே தங்களை சந்திக்க வருபவர்களிடம் பேசலாம். அதன் படி நாளை 29ம்தேதி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, கெஜ்ரிவாலை சந்திக்கிறார். தொடர்ந்து 30ம் தேதி பஞ்சாப் முதல்வரும் கெஜ்ரிவாலை சந்திக்கிறார்.

இதன் காரணமாக இந்த வாரத்தில் இரண்டு சந்திப்புகள் நிகழ உள்ள நிலையில் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இது பெரும் சரச்சையை உருவாக்கியது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனிதா கெஜ்ரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தகவல் தெரிவித்துள்ளது.

 

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி: ஆம் ஆத்மி கட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tihar Jail Administration ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Aam Aadmi Party ,Kejriwal ,Tihar Jail ,
× RELATED யமுனை நதி மாசுபாட்டிற்கு பாஜகவே காரணம்: முதல்வர் அதிஷி