*வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை பேராசிரியர்கள் விளக்கம்
மன்னார்குடி : மண்ணின் வளம் காக்க பயறுவகைச் சார்ந்த பசுந்தாள் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, கொளஞ்சி, நரிப்பயறு போன்றவற்றை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதால் மண்ணில் அங்கச்சத்து அதிகரிக்கிறது. மே லும், மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணியிர்களின் பெருக்கமும் அதிகரி க்கிறது.
இதுகுறித்து, வம்பன் பயறு வகை ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை உத விப் பேராசிரியர் ராஜா ரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர் யுவராஜா ஆகியோர் கூறியதாவது: உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், அதிக மகசூல் பெறுவதற்காக வும், தொழிற் நுட்பங்கள் மற்றும் இடு பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. அவற்றுள் ரசாயன உரங்கள், பூச்சி,நோய் மற்றும் களைக்கொல்லி மருந்துகள் மிக முக்கியமானவை.
இவை தொடர்ந்து அளவிற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதன் விளை வாக மண்ணிலுள்ள பவுதீக ரசாயன மற்றும் உயிரியல் பண்புகளில் பல்வேறு மாற்றங்கள் உண்டாவதாலும், கரிம பொருட்களின் அளவு குறைந்து விடுவதாலும் மண் வளம் குறைந்து காணப் படுகிறது.மேலும் இயற்கை உரங்களின் பற்றாக்குறை மற்றும் அவற்றின் அதிக விலை காரணமாக தற்போது பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரங்கள் பயன் படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர். எனவே தொடர்ந்து ரசாயன மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்வதால் மண் ணின் வளம் தொடர் ந்து குறைந்து கொண்டே வருகிறது.
எனவே, மண்ணின் வளம் காக்க பயறுவகைச் சார்ந்த பசுந்தாள் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, கொளஞ்சி, நரிப்பயறு போன்றவற்றை சாகுபடிசெய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதால் மண்ணில் அங்கச் சத்து அதிகரிக் கிறது. மேலும் மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணியிர்களின் பெருக்க மும் அதிகரிக்கிறது.
சணப்பு: இவை வண்டல் மண் நிலத்திற்கு மிகவும் ஏற்றது. இதனை விதைத்த 45 முதல் 60 நாட்களுக்குள் மடக்கி உழவேண்டும். இவை எக்கருக்கு 8 முதல் 10 டன் பசுந்தாள் உற்பத்தியாகி 75 முதல் 80 கிலோ தழைச் சத்தை நிலைநிறுத்தி மண்ணிற்கு வழங்க வல்லது. உலர்நிலையில் 2.30 சத தழைச் சத்து, 0.50 சத மணிச்சத்து மற்றும் 1.80 சத சாம்பல்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
தக்கைப்பூண்டு : போதுமான தண்ணீர் வசதி உள்ள இடங்களில் அனைத்து பருவத்திலும் விதைக்கலாம். அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது. உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கும் தன்மையை தாங்கி வளரக்கூடியது. உலர்நிலையில் 3.50 சத தழைச்சத்து, 0.60 சத மணிச்சத்து மற்றும் 1.20 சத சாம்பல்சத்தை உடையது.
பசுந்தாள் பயிர்களின் நன்மைகள்: பசுந்தாள் பயிர்கள் மக்கும்போது உண்டா கும் வேதிவினைகளால் களைச் செடிகளின் முளைப்புத்திறன் பாதிக்கப் படு கிறது. பசுந்தாள் பயிர்களிலுள்ள ஆல்கலாய்டுகள் மண்ணிலுள்ள பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் மற்றும் நோய் கிருமிகளில் பாதிப்பை உண்டாக்குவதால் அடுத்து சாகுபடி செய்யப்படும் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவாகவே காணப்படும். மேலும் நூற்புழுக்களின் பாதிப்பையும் கட்டுப் படுத்துகிறது. இவ்வாறு வம்பன் பயறு வகை ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா ரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர் யுவராஜா ஆகியோர் ஆகியோர் கூறினர்.
The post அங்கக சத்தை அதிகரிக்கும் பசுந்தாள் பயிர், மண்ணிற்கு உயிர் appeared first on Dinakaran.