×

நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!

சென்னை: நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. ரயிலில் பணம் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 26ம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். ரூ.4 கோடி பணம் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடையது என்று சதீஷ் வாக்குமூலம் அளித்தார். வழக்கு சிபிசிஐடி-க்கு நேற்று மாற்றப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

The post நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : CBCID ,Nayanar Nagendran ,CHENNAI ,Satish ,Naveen ,Perumal ,Nayanar ,Nagendran ,Dinakaran ,
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி...