- உலக பாரம்பரிய தினம் ஓவியப் போட்டி
- கந்தர்வகோட்
- கந்தரவக்கோட்டை
- உலக பாரம்பரிய தினம்
- சிவந்தன்பட்டி ஹவுஸ்
- கல்வி மையம்
- புதுக்கோட்டை மாவட்டம்
- கந்தர்வகோட்டை ஒன்றியம்
- கோகிலா
- உலக பாரம்பரிய தினம்
- தின மலர்
கந்தரவகோட்டை, ஏப்.29: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சிவந்தான்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தன்னார்வலர் கோகிலா வரவேற்றார். உலக பாரம்பரிய தின ஓவியப் போட்டியை இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தொடங்கி வைத்து பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும், நமது கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஏப்ரல் மாதம் உலக பாரம்பரிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பல்வேறு நாடுகளில் இது உலக பாரம்பரிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. நமது கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை வரையறுக்கும் அற்புதமான வரலாற்று நினைவுச் சின்னங்களை இந்தியா கொண்டுள்ளது என்றார். முன்னதாக மாணவர்கள் உலக பாரம்பரியம் குறித்த ஓவியங்களை வரைந்தனர். சிறந்த ஓவியத்திற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் ஜெயக்குமாரி, ராஜலட்சுமி உள்ளிட்டோர்
The post கந்தர்வகோட்டை அருகே உலக பாரம்பரிய தின ஓவியப்போட்டி appeared first on Dinakaran.