- தேவகோட்டை
- காமராஜ் நகர்
- திருச்சி-ராமேஸ்வரம் மாநில நெடுஞ்சாலை
- புலியல்
- தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம்
- தின மலர்
தேவகோட்டை, ஏப்.29: தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் புளியால் கிராமத்தில் திருச்சி-ராமேஸ்வரம் மாநில நெடுஞ்சாலையின் வலதுபுறம் காமராஜர் நகர் உள்ளது. சாலையின் முன்பாக சாக்கடை தெப்பக்குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த சாக்கடை குளத்தை தாண்டி பள்ளிக்கூடம் சர்ச் மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என அனைத்திற்கும் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
மாதங்கள் பல கடந்தும் நடவடிக்கை இல்லை. இது குறித்து சமூக ஆர்வலர் ஆனந்த் கூறுகையில், கடந்த வருடம் முதல் ஒவ்வொரு கிராமசபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.கேட்டால் ஒர்க் ஆர்டர் போட்டாச்சு. நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டரும் எடுத்து வேலையும் நடக்கப் போகிறது என ஆறு மாதமாக கூறி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மக்களின் வாழ்வாதார பிரச்ணைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
The post நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.