- தேசிய நல திட்ட முகாம்
- வேளாண்மை கல்லூரி
- மதுரை
- மதுரை வேளாண் கல்லூரி
- சமூக அறிவியல் கல்லூரி
- தேசிய
- நலன்புரி திட்டம் சிறப்பு
- முகாம்
- மயந்திபட்டி
- அருண்
- ரவி
- குமார்
- நாட்டின் நலன்புரி திட்ட முகாம்
- வேளாண் கல்லூரி
- தின மலர்
மதுரை, ஏப். 29: மதுரை வேளாண் கல்லூரி மற்றும் சமுதாய அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் சார்பில், நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் மாயண்டிபட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. சமுதாய கல்லூரி மாணவர்கள் அருண், ரவி, குமார் ஆகியோர் காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் திட்ட அலுலவலர்கள் ரேவதி, தமிழ்செல்வி முகாம் குறித்து பேசினர்.
இந்நிகழ்வில் எம்பவர் அறக்கட்டளை முத்து பாண்டியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகாமில் சுற்றுச்சூழல் மாசுபாடு, மாறிவரும் உணவு பண்பாடு, சாலை விதி பாதுகாப்பு, போதை தடுப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் அட்சரா, பிரியா, நவோதயன், கார்த்திகா, நந்தா, நாராயணன், அதியமான் ராஜா ஆகியோர் விழிப்புணர்வு வழங்கினர். மனையியல் பேராசிரியர் நாகர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
The post வேளாண் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் appeared first on Dinakaran.