×

கராத்தே அசோசியேசின் செயற்குழு கூட்டம்

 

கரூர், ஏப்.29: இந்தியாஸ் கியகிசின் கராத்தே அசோசியேசின் மற்றும் இந்தியா செயற்குழு கூட்டம் தேசிய தலைவர் சீகான் ராமதாஸ் தலைமையில் கரூர் மேட்டுத்தெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . இதில் ஸ்போட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் மற்றும் கேலோ இந்தியாவில் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதற்காக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்போட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவின் விதிகள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு சிலம்ப செயலாளராக கிருஷ்ணமூர்த்தியும், துணை செயலாளராக வீரமணியும், தமிழ்நாடு செயலாளராக பாலசுப்ரமணியனும் தேர்வு செய்யப்பட்டனர். தேசிய செயலாளர் மதன்குமார், தேசிய துணை தலைவர் ரவிச்சந்திரன், தேசிய இணை தலைவர் குமாரசாமி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கராத்தே அசோசியேசின் செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karate Association ,Karur ,India ,Kyakisin Karate Association ,India Executive Committee ,Karur Mttutheru ,National President ,Seekhan Ramadoss ,Sports Authority of India ,Karate Association Executive Committee ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் மீன்...