×

பழநியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

பழநி, ஏப்.29: பழநியில் பக்தர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பஅலை வீசி வருகிறது. இந்த நிலையில் பழநி பஸ் நிலையம் அருகில் திமுக சார்பில் நேற்று நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் வேலுமணி, ஒன்றிய செயலாளர்கள் சௌந்திரபாண்டியன், சுவாமிநாதன், பேரூர் செயலாளர்கள் சோ.காளிமுத்து, சின்னத்துரை, அபுதாகீர், நகர துணைச் செயலாளர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதி அழகேசன், பழநி யூனியன் தலைவர் ஈஸ்வரி கருப்புச்சாமி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் இந்திரா, நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நகர பொறியாளரணி அமைப்பாளர் வீரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பழநியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Nemor ,DMK ,Palani ,Tamil Nadu ,Nemor Pandal ,Palani Bus Station ,
× RELATED பழநி வடகவுஞ்சியில் பாதை வசதி ஏற்படுத்தி தர கோரி மனு