- பித்து
- தடுப்பூசி
- முகாம்
- கோவில்பதி
- கோவில்பட்டி
- ரேபிஸ்
- கோவில்பட்டி மாநில கால்நடை மருத்துவமனை
- உலக கால்நடை மருத்துவர்கள் நாள்
- கால்நடை பராமரிப்பு திணைக்களம்
- கோவில்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை வளாகம்
- தடுப்பூசி முகாம்
- கோவில்பட்டி
- தின மலர்
கோவில்பட்டி, ஏப். 29: உலக கால்நடை மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கோவில்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த இம்முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் எட்வின் தலைமை வகித்தார். வனத்துறை அலுவலர்கள் பிரசன்னா, பாலகுமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் சஞ்சீவராஜ், முகாமை துவக்கிவைத்தார்.
இதில் உரிமையாளர்களால் அழைத்துவரப்பட்ட நாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் கண்ணபிரான், ராகுல் கிருஷ்ணாகாந்த், நந்தகுமார், சதீஷ்குமார், அபிநாஷ் உள்பட பயிற்சி மருத்துவ மாணவர்கள் அடங்கிய குழுவினர் வெறிநோய் தடுப்பூசிகள் போட்டனர். முகாமில் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அத்துடன் மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டினர்.
The post கோவில்பட்டியில் வெறி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.