நெல்லை, ஏப்.29: நெல்லை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல் படையினர் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு எஸ்.பி. உத்தரவின்பேரில் பிரியாணி விருந்து வழங்கி பாராட்டப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணி செய்த ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் ஆகியோரின் பணியை பாராட்டி அவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் காவல்நிலையங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசாருக்கு பிரியாணி விருந்து வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார் பிரியாணி விருந்தில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
The post நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணி செய்த ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல் படையினருக்கு `பிரியாணி விருந்து’ appeared first on Dinakaran.