- தங்கபாலம் வேளாண் கல்லூரி
- உலக புவி நாள்
- தென்காசி
- கோல்டன் ஃப்ரூட் விவசாயக் கல்லூரி
- அபிராமி
- அகிலா
- ஹேமா
- ஐஸ்வர்யா
- ஜானி ஆஷ்னா
- மனிஷா வர்ஷினி
- பூஜை
- செல்வ ரோகினி
- செல்வ உமா
- வெண்ணிலா
- Sankaranko
- கோல்டன் பழ விவசாயம்
- உலகம்
- புவி தினம்
- கல்லூரி
- தின மலர்
தென்காசி, ஏப்.29: தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் அபிராமி, அகிலா, ஹேமா, ஐஸ்வர்யா, ஜானி ஆஷ்னா, மனிஷா வர்ஷினி, பூஜா, செல்வ ரோஹிணி, செல்வ உமா மற்றும் வெண்ணிலா ஆகியோர் உலக புவி தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் தாலுகா மலையான்குளம் ஊராட்சியில் உள்ள வீரப்பா நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசுந்தர் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளி மாணவர்களுக்கு புவி தினம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாடு குறித்தும் நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இறுதியாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
The post உலக புவி தினத்தை முன்னிட்டு தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.