- சீத்தாராமன் திருகல்யாண உற்சவம்
- நாகையநல்லூர்
- தானியம்
- சீதாராமன் திருகல்யாண வைபவம்
- ராம் பஜனை மடம்
- நாகையநல்லூர் அக்ரஹாரம்
- தனியம் தாலுகா
- திருச்சி மாவட்டம்
- மகாகணபதி பூஜை
- கலச ஸ்தாபனம்
- அனுগ்நாய
- சீதாராமன் திருகல்யாண உற்சவம்
தொட்டியம், ஏப், 29: திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா நாகையநல்லூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ராமர் பஜனை மடத்தில் வருடந்தோறும் சீதாராமன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். நேற்று ராமநவமி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மஹாகணபதி பூஜை, கலச ஸ்தாபனம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், மூலபாராயணம், ராம ஷடாக்க்ஷரி ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான சீதாராமன் திருக்கல்யாண வைபவ மகோத்சவம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழபாடு நடத்தினர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நாகையநல்லூர் ராமநவமி கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்
The post தொட்டியம் அருகே நாகையநல்லூரில் சீதாராமன் திருக்கல்யாண உற்சவம் appeared first on Dinakaran.