×

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

நெல்லை: நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னைக்கு இரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒன்று வியாழன் தோறும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் (எண்.06068), மற்றொரு வந்தே பாரத் ரயில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் (எண்.06058) சிறப்பு ரயில்களாக இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன.

கோடைகால கூட்ட நெரிசலை சமாளிக்க வியாழன் தோறும் இயக்கப்படும் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் (எண்.06067), நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வந்தே பாரத் (எண்.06068) ரயில்கள் வரும் மே 2ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 27ம் தேதி வரை தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்படுகின்றன.
வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் இயக்கப்படும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத்(எண்.06057), நாகர்கோவில்- சென்னை எழும்பூர் வந்தே பாரத் (எண்.06058) ரயில்களும் வரும் மே 3ம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகின்றன.

The post கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Vande ,Chennai-Nagarko ,Nella ,Vande Bharat Express ,Nargoville ,Chennai ,Nagarkov ,Chennai -Nagargo ,Dinakaran ,
× RELATED சென்னை-திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்: 2 மாதங்களில் சோதனை