- Chayalgudi
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காவகுளம் பஞ்சாயத் யூனியன் ஆரம்பப்
- முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி
- ராமநாதபுரம் மாவட்டம்
- ராஜகுமரன்
- காவகுளம்
சாயல்குடி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நடந்த வாக்குப்பதிவின் போது, காவாகுளம் பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் (28) வாக்குச்சாவடி மையத்திற்குள் தடையை மீறி செல்போன் எடுத்துச்சென்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சின்னமான பலாப்பழத்திற்கு வாக்களித்தை வீடியோ எடுத்துள்ளார்.
வெளியே வந்த அவர், ‘நான் பலாப்பழம் சின்னத்திற்கு தான் வாக்களித்தேன். நம்பவில்லை என்றால் இதோ பாருங்கள்…’ என்று தான் பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடும்போது எடுத்த வீடியோவை காண்பித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரல் ஆனது. இதையடுத்து, அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ராஜகுமாரன் மீது கீழச்செல்வனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பலாப்பழ சின்னத்திற்கு வாக்களித்து வீடியோ எடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.