×
Saravana Stores

உலகின் 3வது பொருளாதார நாடு யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம்: பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசுவதாக ப.சிதம்பரம் கருத்து

கொல்கத்தா: உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா சாதிப்பது தவிர்க்க முடியாதது. அது யார் பிரதமராக இருந்தாலும் நடந்தே தீரும்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி எப்போதும் மிகைப்படுத்துவதில் வல்லவர். தவிர்க்க முடியாத கணக்கை அவர் தனது உத்தரவாதமாக பிரசாரம் செய்கிறார்.

மீண்டும் அவர் பிரதமரானால் தான் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாகும் என்கிற பிம்பத்தை உருவாக்குகிறார். ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில், உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா சாதிப்பது தவிர்க்க முடியாதது. 2004ல் இந்தியாவின் ஜிடிபி 12வது இடத்திலும், 2014ல் 7வது இடத்திலும் இருந்தது. இது 2024ல் 5வது இடத்திற்கு முன்னேறியது.

எனவே, அடுத்ததாக இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறுவது நிச்சயம். இதற்கும் பிரதமராக யார் இருக்கிறார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதில் எந்த மாயமும் மந்திரமும் இல்லை. நமது மக்கள் தொகை அளவுதான் இந்த தவிர்க்க முடியாத சாதனையை சாத்தியமாக்கி இருக்கிறது. ஆனால், ஒரு நாட்டின் ஜிடிபி அளவு, அந்நாட்டின் மக்கள் வளமாக இருப்பதற்கான உண்மையான அளவீடு அல்ல என்பது எனது கருத்து. தனிநபர் வருமானமே துல்லியமான அளவீடாகும். உலகளாவிய தனிநபர் வருமானத்தில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது.

The post உலகின் 3வது பொருளாதார நாடு யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம்: பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசுவதாக ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.

Tags : India ,P. Chidambaram ,PM Modi ,KOLKATA ,Senior ,Congress ,B. Chidambaram ,West Bengal ,
× RELATED பல இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப்...