×
Saravana Stores

தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப்பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

The post தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Ramadoss ,CHENNAI ,Patali Makkal Party ,Director of Elementary Education ,Department of Primary Education ,Tamil Nadu ,Tamil Nadu… ,Ramdas ,Dinakaran ,
× RELATED மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கே என...