×
Saravana Stores

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு எதிரொலி; போக்குவரத்தை சீரமைக்க 200 போலீசார் நியமனம்

ஊட்டி:ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு போக்குவரத்தை சீரமைக்க 200 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
குறிப்பாக, கோடை சீசனின் போது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

ஆண்டு தோறும் கோடையில் போக்குவரத்தை சீரமைக்க வெளியூர் போலீசார் வரவழைக்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை பாராளுமன்ற தேர்தல் நடந்த நிலையில்,அரசியல் கட்சி தலைவர்கள் பாதுகாப்பு, பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், கோடை சீசன் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளுக்காக வெளி மாவட்ட போலீசாரை அழைக்க முடியாத நிலை உருவாகியது. இதனால், உள்ளூர் போலீசார், ஊர் காவல் படை, மற்றும் டிராபிக் வார்டன்ஸ் ஆகியோரை கொண்டு போக்குவரத்து சீரமைப்பு பணிகளை கடந்த சில நாட்களாக மேற்க்கொண்டு வந்தனர். எனினும், தற்போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நாள் தோறும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்வதால் போக்குவரத்து சீரமைப்பு, சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், நாள் தோறும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், சீசன் முடியும் வரை நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு, சாலை சீரமைப்பு ஆகிய பணிகளுக்காக 200 போலீசார் நியமிக்கப்பட்டள்ளனர். இவர்கள் வந்தால், ஊட்டி நகரில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் வார விடுமுறை நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளது. காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் தற்போது சீசன் துவங்கியுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிைலயில், வாகன நெரிசல் ஏற்படுகிறது. பொதுவாக சீசன் சமயங்களில் ஏற்படும் வாகன நெரிசைல தவிர்க்க ஏப்ரல் மாதம் 1ம் ேததி முதல் கூடுதல் போலீசார் நியமிக்கப்படும்.

ஆனால், இம்முறை பாராளுமன்ற தேர்தல் நடந்த காரணத்தால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், சீசன் பாதுகாப்பு பணிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் ேபாலீசார் வரவழைக்க முடியாத நிைல ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை மையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும், நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், 200 போலீசார் நியமிக்கப்பட்டள்ளனர். இவர்களுடன் ஊர்காவல் படை மற்றும் டிராபிக் வார்டன்கள் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவார்கள், என்றனர்.

The post சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு எதிரொலி; போக்குவரத்தை சீரமைக்க 200 போலீசார் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Dinakaran ,
× RELATED உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்