×

மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. மத்திய சென்னை வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி, அண்ணாநகர் பாஜக நிர்வாகி ராஜ்குமார் மீது வழக்கு பதிவுசெய்யபட்டுள்ளது.

மத்திய சென்னை பாஜக தேர்தல் பணிமனையானது சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாஜக அண்ணாநகர் வடக்கு மண்டல தலைவர் ராஜ்குமார் மற்றும் பாஜக வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி ஆகியோர் இடையே தேர்தல் பணி தொடர்பாக வாட்சப்பில் வார்த்தை போர் நடந்துள்ளது. தொடர்ந்து நேற்று முன்தினம் இருவரும் நேரில் சந்தித்தபோது தேர்தல் பணிமனை வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நேற்று இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்தனர். இருதரப்பினர் புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யபட்டுள்ளது. தொடர்ந்து தேர்தல் பணிமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துவருகிறனர்.

The post மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,central Chennai constituency ,Chennai ,Central Chennai ,Madhya Chennai ,Commerce Secretary ,Murthy ,Annanagar ,Rajkumar ,Madhya ,Chennai BJP ,Dinakaran ,
× RELATED பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு