சென்னை: என்ன படிப்பது என தெரியாமல் விழித்த எங்களுக்கு வழிகாட்டியது தினகரன் கல்வி கண்காட்சி என்று மாணவ, மாணவிகள் பெருமிதத்துடன் கூறினர்.
தினகரன் கல்வி கண்காட்சியில் கலந்துகொண்ட பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் அளித்த பேட்டி
* சவுந்தர்யா (பூந்தமல்லி, காட்டுப்பாக்கம்)
மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக எனது தந்தை சென்றபோது நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கல்வி கண்காட்சி நடைபெறும் விளம்பர போர்டை பார்த்து என்னை கண்காட்சிக்கு அனுப்பி வைத்தார். என்ன படிப்பது என்று தெரியாமல் விழித்த எனக்கு இங்குள்ள கல்வியாளர்கள் பல்வேறு ஆலோசனை வழங்கினார்கள். இதன் மூலம் பயோடெக் படிப்பது என்று முடிவெடுத்துள்ளேன். இது எனக்கு பிடித்துள்ளது. பெற்றோரிடம் கூறினேன். அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
* பாவனா (ராமாபுரம்)
நான் ராமாபுரத்தில் இருந்து வருகிறேன். சன் டிவி மூலமாக தினகரன் எக்ஸ்போ குறித்து அறிந்து வந்தேன். கல்வி சம்பந்தமாக பல்வேறு ஸ்டால்களை பார்த்தேன். பல விவரங்களை கல்லூரி நிறுவனத்தை சார்ந்தவர்கள் கொடுத்த ஆலோசனை மூலம் தெரிந்து கொண்டேன். இதில் பி.இ படிப்பது பிடித்திருந்தது. அதனால் அதையே தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளேன். கல்லூரியையும் தேர்வு செய்துள்ளேன், மகிழ்ச்சியாக உள்ளது
* ஸ்ரீஅட்சயா (போரூர்)
என்ன படிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த எனக்கு தினகரன் எக்ஸ்போ மூலம் தெளிவு ஏற்பட்டது. ஒவ்வொரு கல்வியாளரும் தெளிவாக அந்தந்த படிப்புகள் குறித்து விளக்கி கூறினர். அது எனக்கு உதவிகரமாக இருந்தது. கடைசியாக பி.காம் படிப்பது என முடிவு செய்துள்ளேன். அதில் தெளிவாக உள்ளேன். எந்த கல்லூரியில் சேர்வது என்பது குறித்து பெற்றோரின் ஆலோசனை பெற்று முடிவெடுப்பேன். மேலும், இந்த எக்ஸ்போ குறித்து எனது தோழிகளுக்கும் எடுத்து சொல்வேன்.
* முகமது ரியாஸ் (பாடியநல்லூர்)
நான் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தேன். நண்பர்கள் மூலமாக தினகரன் கல்வி கண்காட்சி நடப்பது குறித்து தெரிந்து கொண்டு வந்தேன். இங்கு வந்த பிறகுதான் இவ்வளவு படிப்புகள் இருப்பதை தெரிந்து கொண்டேன். வேலைவாய்ப்புகள் உள்ள படிப்புகள் குறித்தும் விளக்கி கூறினார்கள். இன்ட்ரஸ்ட்டிங்காக இருந்தது. இப்போது நான் சிவில் ஏவியேஷன் படிக்க முடிவு செய்துள்ளேன். எனது விருப்பத்தை பெற்றோரிடம் கூறுவேன்.
* ஸ்ரீமன் ராஜ் (செங்குன்றம்)
தினகரன் கல்வி கண்காட்சி மூலம் எல்லா கல்லூரிகளையும் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு உள்ள கல்லூரிகளின் நிர்வாகத்தினர் தங்கள் கல்லூரியில் உள்ள படிப்புகள், சலுகைகள் குறித்து தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். கல்விக் கடன் வழங்கும் வங்கிகள் குறித்தும் தெரிந்து கொண்டேன். நான் சிவில் இன்ஜினியரிங் படிக்க உள்ளேன். எந்த கல்லூரி என்பதை பெற்றோர் முடிவெடுப்பார்கள்.
The post ‘என்ன படிப்பது என தெரியாமல் விழித்த எங்களுக்கு வழிகாட்டியது’ :தினகரன் கல்வி கண்காட்சிக்கு வந்த மாணவர்கள் பூரிப்பு appeared first on Dinakaran.