×

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

பள்ளிப்பட்டு, ஏப். 28: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.ஜெயக்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ₹1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வணிக வளாக கட்டிட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து பள்ளிப்பட்டு சாலையில் ₹12 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் ஆய்வு செய்தார். இதனையடுத்து அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்து கோடையில் தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், இளநிலை பொறியாளர் சீர்பாத சேகர், இளநிலை உதவியாளர் முருகவேல், கணினி இயக்குபவர் தணிகைவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Bodaturpet Municipality ,Pothatturpet Municipality ,S. Jayakumar ,Pothaturpet Municipality ,Tiruvallur District ,Dinakaran ,
× RELATED அசோக் செல்வன், சாந்தனு இணையும் படம்