×
Saravana Stores

குண்டாசில் இருவர் கைது

நெல்லை, ஏப். 27: அம்பை பிரம்மதேசம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (22). கோடகநல்லூர் கீழ அக்ரஹார தெருவை சேர்ந்தவர் பாலசுந்தர் (24). இவர்கள் மீது கொலை,கொலை முயற்சி வழக்குகள் கல்லிடை, சுத்தமல்லி போலீசில் உள்ளன. இருவரும் கைதாகி பாளை சிறையில் உள்ளனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை எஸ்பி சிலம்பரசன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கவிதா ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனுக்கு பரிந்துரைத்தனர். அவரது உத்தரவின் பேரில் ஆறுமுகம், பாலசுந்தரை குண்டாசில் கைது செய்ததற்கான ஆணைகளை பாளை மத்திய சிறையில் வழங்கினர்.

The post குண்டாசில் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kundazi ,Nellie ,Arumugam ,Ambai Brahmadesam Keeza Street ,Balasundar ,Kodaganallur Lower Agrahara Street ,Kallidai ,Sudhamalli ,Palai Jail ,Kundasil ,
× RELATED போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி குண்டாசில் சிறையில் அடைப்பு